215
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரிய ஏவுகணை பரிசோதனைகள் காரணமாக சிங்கப்பூர் விமான சேவை தனது பாதையை மாற்றிக் கொண்டுள்ளது.
தென்கொரியா மற்றும் அமெரிக்காவிற்கான விமானப் பாதையை மாற்றிமைத்துள்ளது. வடகொரியா அடிக்கடி இவ்வாறான ஏவுகணைகளை பரிசோதனை செய்து வருவதனால் இவ்வாறு விமான பாதையை மாற்றியமைத்துள்ளது.
ஏனைய நாடுகளைப் போன்று வடகொரியா பரிசோதனைக்கு முன்னதாக முன் அறிவிப்பு எதனையும் வெளியிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வடகொரிய விமான பரப்பை ஒரு ஆண்டுகளாக பயன்படுத்துவதில்லை என ஜெர்மனிய விமான சேவையான லுப்தான்சா தெரிவித்துள்ளது.
Spread the love