180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
முஸ்லீம் காங்கிரஸ் உடன் இணைந்து செயற்படுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில். நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், முசலி பிரதேச சபை தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் எண்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளது. அது தொடர்பிலான பேச்சுக்கள் இடம்பெறும். வடக்கு கிழக்கு இணைப்பில் விருப்பம் உள்ளவர்கள் முஸ்லீம் காங்கிரஸ் அதனால் அவர்களுடன் இணைந்து செயற்பட நாம் தயாராகவே உள்ளோம் என தெரிவித்தார்.
Spread the love