குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மூத்த ஊடகவியலாளர் என். வித்தியாதரனை தமிழரசு கட்சிக்குள் உள்வாங்க கூடாது எனவும் , மேயர் வேட்பாளராக நிறுத்தக்கூடாது எனவும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற ஒருவர் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக அறிய முடிகிறது.
மூத்த ஊடகவியலாளரான என். வித்தியாதரனை தமிழரசு கட்சிக்குள் உள்வாங்கி யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளராக களமிறக்க தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
அந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் , தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவை கோப்பாய் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதிக்கு அழைத்து இராபோசன விருந்து அளித்துள்ளார்.
அதன் பின்னர் வித்தியாதரனை தமிழரசு கட்சிக்குள் உள்வாங்க கூடாது. யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளராக களமிறக்க கூடாது என அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது சார்பில் மேலும் சில தமிழரசு கட்சி உறுப்பினர்களை கூறி அவர்களும் வித்தியாதரன் தமிழரசு கட்சிக்குள் உள்வாங்கப்படுவதனை விரும்பவில்லை. அவர்களும் அதற்கு எதிர்ப்பு என தெரிவித்து உள்ளார். இதனால் மாவை சேனாதிராஜா தற்போது கடும் அழுத்தத்தின் மத்தியில் உள்ளதாக அறிய முடிகிறது.
அதேவேளை வித்தியாதரனை தமிழரசு கட்சிக்குள் உள்வாங்குவதற்கு வேறு ஒரு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சில மாகாண சபை உறுப்பினர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது.