ஜெருசலேம் விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு எதிரான போராட்டங்களைத் தடுப்பதற்காக காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ட்ரம்ப், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந் அமெரிக்க தூதரகம் விரைவில் ஜெருசலேம் நகருக்கு மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனால் ஸ்ரீநகரின் சில இடங்களில் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் பிரிவினைவாதத் தலைவரான மிர்வைஸ் உமர் ஃபரூக் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் குறித்த பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது