குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் தினேஸ் குணவர்தன இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் போது முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியிருப்பதாக அவர் பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துமாறு தினேஸ் குணவர்தன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளார்.