குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காலநிலை சீர்கேட்டினால் ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புக்களை தடுக்க விசேட பொறிமுறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இயற்கை அனர்த்தங்கள் மற்றும் காலநிலை சீர்கேடுகளினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை வரையறுக்கும் வகையில் புதிய பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியனவற்றுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இயற்கை சீற்றம் காரணமாக நாட்டின் விவசாயத்துறை பாரியளவு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் சீரற்ற காலநிலையினால் அரிசி, மரக்கறி மற்றும் தேங்காய் உற்பத்திகள் பாரியளவில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இயற்கை சீற்றத்தினால் விவசாயத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.