180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பௌத்த மதத்தை உலகம் முழுவதிலும் வியாபிக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பன்னிப்பிட்டி பெலன்வத்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பௌத்த மதத்தை இலங்கையில் மேம்படுத்தும் அதேவேளை, உலக அளவில் பௌத்த மததத்தை வியாபிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றுக் காலம் முதல் இலங்கை தேரவாத பௌத்த மதத்தை பாதுகாத்து, உலகின் பல நாடுகளுக்கு பௌத்த மதத்தை வியாபித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
Spread the love