மட்டக்களப்பில் 31 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய், எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு பொறுப்பு வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் ஆண்டுதோறும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் பதினெட்டாயிரம் பேருக்கு எச்ஐவி பிரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொதுச் சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுகளிலும் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்றையதினம் அவர் இந்தத் தகவல்களை வெளியட்டுள்ளார்.
மேலும் இனங்காணப்பட்;டவர்களில் 26 பேர் கொழும்பிலும் 2 பெண்கள் உட்பட 5 பேர் மட்டக்களப்பிலும் சிகிச்சை பெற்று வருகிவதாகவும் குறிப்பிட்டுள்ளர்h.
எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் எனவும் பெரும்பாலும் வெளியிடங்களிலிருந்தே இவர்கள் தொற்றுக்குள்ளாகியிருக்கின்றார்கள் என்பதும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக அந்தஸ்து மற்றும் அவமானம் போன்றவற்றினால் எயிட்ஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளாத நிலைய காணப்படுவதாகவும் இதுகுறித்து தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.