குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெனிசுலாவின் எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2018ம் ஆண்டில் வெனிசுலாவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மூன்று பிரதான எதிர்க்கட்சிளுக்கு இவ்வாறு போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் ஜனாதிபதி நிகலோஸ் மடுரோ (Nicolas Maduro) இந்த தடையுத்தரவினை பிறப்பித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேயர் தேர்தலில் பங்கேற்ற கட்சிகள் மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முறைமை பக்கச்சார்பானது எனத் தெரிவித்து நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் சில இந்த மேயர் தேர்தலில் போட்டியிடவில்லை. ஜஸ்ரிஸ் பெஸ்ற் ( Justice First) பொப்பியூலர் வில் ( Popular Will )மற்றும் டெமோகிரடிக் அக்ஷன் ( Democratic Action )ஆகிய கட்சிகளே இவ்வாறு தேர்தலில் பகிஸ்கரித்திருந்தன. எனினும் வெனிசுகலாவின் தேர்தல் முறைமை மிகவும் நம்பகமானது என ஜனாதிபதி மாடுரோ தெரிவித்துள்ளார்.