Home உலகம் பங்களாதேஸ் அணியின் புதிய தலைவராக சகிப் அல் ஹசன் நியமனம்

பங்களாதேஸ் அணியின் புதிய தலைவராக சகிப் அல் ஹசன் நியமனம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பங்களாதேஸ் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக  சகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் மாதம் இலங்கை அணியுடன் டெஸ்ட் போட்டித் தொடர் ஒன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடருக்கான பங்களாதேஸ் அணித் தலைவராக சகிப் அல் ஹசன்   நியமிக்கப்பட்டுள்ளார்.

2011ம் ஆண்டில்சகிப் அல் ஹசனிடமிருந்து தலைமைப் பதவியை பெற்றுக் கொண்ட அணியின் விக்கட் காப்பாளர் முஸ்பிகுர் ரஹீமிடமிருந்து மீளவும் சகிபுல் ஹசன் தலைமைப் பதவியை பெற்றுக்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு போட்டிகளைக் கொண்ட இலங்கைக்கு எதிரான போட்டித் தொடருக்கான பங்களாதேஸ் அணியை சகிப் அல் ஹசன்   வழிநடத்த உள்ளார்.

இதேவேளை, அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய சந்திக்க ஹதுருசிங்க இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bangladesh’s Shakib Al Hasan walks from the field after their win in the Pool A 2015 Cricket World Cup match between Bangladesh and Scotland at Saxton Park Oval in Nelson on March 5, 2015. AFP PHOTO / MARTY MELVILLE (Photo credit should read Marty Melville/AFP/Getty Images)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More