181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
யாழ்.கோட்டை பகுதியில் உள்ள கிறித்தவ தேவாலயத்தின் அந்தோனியார் திருசொரூபம் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பெட்டி இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு உள்ளது. யாழ்.கோட்டை பகுதியில் அமைந்துள்ள குறித்த கிறிஸ்தவ தேவாலயத்திற்கு மிக அருகில் யாழ்.தலைமை பொலிஸ் நிலையம் மற்றும் இராணுவ முகாம் என்பன அமைந்துள்ளன. அந்நிலையிலை குறித்த தேவாலயத்தின் மீது கற்களால் வீசி கண்ணாடிகளை உடைத்துள்ளனர். அண்மைக்காலமாக வடக்கில் கிறிஸ்தவ தேவாலயங்கள் , இந்துக்கோயில்களை இலக்கு வைத்து இனம் தெரியாதோர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love