கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வியின் அடைவு மட்டம் ஏன் குறைவாக இருக்கிறது என்றால் அதற்கு பெற்றேரர்களின் கவனயின்மையும், லீசிங் நிதி நிறுவனங்களும் காரணமாக அமைக்கிறன, என கிளி நொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அன்னை இல்லம் முன்பள்ளியில் இடம்பெற்ற ஒளி விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில்
கிளிநொச்சியில் பெரும்பாலான பெற்றோர்கள் லீசிங் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன்களையும் பொருட்களையும் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்து முடியாது இவா்களுக்கு பயந்து வீடுகளில் இருக்காது ஒழிந்து திரிவதும் , கடன்களை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பது தொடரிபில் சதா யோசித்து யோசித்து பிள்கைளின் கல்வி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாது போகின்ற நிலைமயும் ஒரு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
தனியே ஆசிரியர்கள் அதிபா்கள் அக்கறைச் செலுத்தி மாணவா்களின் க ல்வி நடிவடிக்கைகளை மேம்படுத்த முடியாது பெற்றோர்களும் பிள்ளைகளின் கல்விச் செயற்பாட்டில் அக்கறையோடு இருக்க வேண்டும், தனியே ஒரு கை தட்டி சத்தம் வருவதில்லை எனத் தெரிவித்த கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ்
தற்போது மாணவா்களுக்கு தண்டணை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவும் ஒரு துரதிஸ்டவசமானது. மாணவா்களை ஒழுக்கமுள்ளவா்களாக சிறந்தவா்களாக வளர்த்தெடுக்கும் நோக்கோடு ஆசிரியர்கள் தண்டணை வழங்குகின்றார்கள் ஆனால் தற்போது அதனையும் செய்ய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.