இந்தோனேசியாவின் சபாநாயகர் செட்யா நோவான்ட்டோ . தேசிய அடையாள அட்டைகள் தயாரிப்பில் ஊழல் மேற்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டினையடுத்தே அவர் பதவிவிலகியுள்ளார்.
தேசிய அடையாள அட்டைகள் தயாரிப்பின் போது 17 கோடி அமெரிக்க டொலர்கள் அளவில் ஊழல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில் பாராளுமன்ற சபாநாயகர் செட்யா நோவான்ட்டோவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சுமத்தப்பட்டு அந்நாட்டு ஊழல் ஒழிப்பு அதிகாரிகளால் கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஊழல் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் சபாநாயகராக தொடர்ந்து பதவி வகிக்க அனுமதிக்குமாறும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக் கடிதம் அனுப்பி இருந்த நிலையில் தற்போது பதவிவிலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.