168
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இவ்வாறு மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 18ம் திகதி வரையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இடி மின்னல் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Spread the love