161
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
அரசாங்கம் பலவீனமடைவதனை தடுக்கவே தாம் அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாக ஜே.என்.பி.யின் முன்னாள் உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், ஜனாதிபதியையும் பலப்படுத்தும் நோக்கிலேயே தாம் இணைந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திலிருந்து விலகுமாறு கூட்டு எதிர்க்கட்சி சுதந்திரக் கட்சியிடம் விடுக்கும் கோரிக்கை அரசியல் ரீதியில் பிழையானது என அவர் குறிப்பட்டுள்ளார்.
Spread the love