ஈரானின் கெர்மன் மாகாணத்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலநடுக்கத்தின் தாக்கம் கெர்மன் மாகாணத்தின் பல பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் 57 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று மேற்கு பகுதியில் 5.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தநிலையில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படுவதனால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 530 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வெளிகளில் தஞ்சமடைந்தவர்கள் குளிர் தாங்காமல் உயிரிழந்து வரும் நிலையில், அண்மையில்தான் அங்கு தற்காலிக குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.