குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய ரக்பி ஒன்றியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக முதல் தடவையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ராலேனே காசில் (Raelene Castle ) என்ற பெண்ணே இவ்வாறு அவுஸ்திரேலிய ரக்பி ஒன்றியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்காக விண்ணப்பம் செய்த 200 பேரை பின்தள்ளி ராலேனே பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தவகையில் விளையாட்டில் பால்நிலை சமத்துவம் காணப்படுவதாக ராலேனே தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவை பிறப்பிடமாகக் கொண்ட நியூசிலாந்து பிரஜையான ராலேனே இதற்கு முன்னதாக நியூசிலாந்து வலைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராலேனே சிறந்த ஓர் விளையாட்டுத்துறை நிர்வாகி எனத் தெரிவிக்கப்படுகிறது.