188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காலநிலை மாற்றம் தொடர்பில் செல்வந்த நாடுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். உலகம் வெப்பமயமாதல் தொடர்பில் செல்வந்த நாடுகள் மிகுந்த கரிசனை கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
செல்வந்த நாடுகள், வறிய நாடுகளுககு உதவுவதன் மூலம் காலநிலை மாற்றம் தொடர்பிலான சவால்களை எதிர்நோக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எரிபொருள் உற்பத்தி தொடர்பில் மாற்று வழிகள் அறிமுகம் செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love