குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மாரில் ரொய்டர் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. மியன்மாரின் யன்கூனில் ரொய்டர்ஸ் செய்தி சேவையின் இரண்டு ஊடகவியலாளர்கள் இந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தனர். மியன்மாரில் ஊடக சுதந்திரம் மங்கிப் போவதனையே இந்த கைதுகள் வெளிக்காட்டுகின்றன என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸ் தெரிவித்துள்ளார்.
ரான்கீன் மாநிலத்தில் ரோஹினிய மக்களுக்கு எதிராக மியன்மார் அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் பாரிய மனித உரிமை மீறலாகும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பாரிய மனிதப் பேரவலம் பற்றிய செய்திகளை வெளியிட்ட காரணத்தினால் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் அடிப்படையில் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் உச்சபட்சமாக பதினான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
ரொய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் இருவர் மியான்மரில் கைது
Dec 13, 2017 @ 15:50
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இருவர் மியான்மரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மர் ரணுவத்துக்கும் ரோஹிஞ்சா போராளகளுக்கும் இடையிலான உள்நாட்டு பாதுகாப்பு ஆவணங்களை வைத்திருந்ததாக குறித்த இரண்டு பத்திரிகையளர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வா லோன் மற்றும் கேயாவ் சுயெ ஓ, ஆகிய இரு பத்திரிகையாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
அத்துடன் ராணுவத் தகவல்கள் மற்றும் ரக்கைன் மாநிலத்திலுள்ள ஓரிடத்தின் வரைபடத்தை அவர்கள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்கிழமை மாலை அலுவல் ரகசிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டால் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.