237
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினை என்பனவற்றில் வட மாகாணம் முதல் இடத்தை வகிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தரப்படுத்தலின் அடிப்படையில் அதிகளவு வறுமையான மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார். 2018ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வடக்கின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காண யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மாகாணத்தில் அதிகளவு வேலையில்லாப் பிரச்சினை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love