சுவாமிவிபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கற்கைநெறியின் காலப்பகுதியில் நான்காம் வருட இறுதிஅரையாண்டில் எனகலை வெளிப்பாட்டினை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவலைகளின் ஊடான எனது ஓவியவெளிப்பாடுகளாக முள்ளிவாய்க்கால் போரில் தனிமை ஆக்கப்பட்ட சிறார்களின் நிலையினை தன்னுணர்வு வெளிப்பாட்டினூடாக வெளிப்படுத்தியுள்ளேன்.
இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் இறுதிக்கட்டபோரின் நிமித்தம் சிறுவர்களின் நிலையினை எனது அனுபவங்களின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளேன். போரின் போதுமறைக்கப்பட்ட உண்மைகள், இரு இராணுவங்களுக்கு எதிராக இடம்பெற்றபோரில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும், சிறுவர்களும். இவற்றில் சிறுவர்கள் முக்கியம் பெறுகின்றனர். இன்றும் முடிவடைந்த முள்ளிவாய்க்கால் போரின் விளைவுகள் எமதுமாணவர்கள் மத்தியில் உள்ளன. அவை மறைமுகமாக,நேரடியாகஎம் கண்முன்னே காணக்கூடியதாக உள்ளது. வடகிழக்கு மாணவர்களின் கல்விமட்டம், குடும்பநிலை என்பவற்றின் ஊடாகநாம் அதனைவிளங்கிக் கொள்ளமுடியும்.
இவ்வாறான சிறுவர்களின் நிலையினை பலகோணங்களில் எனதுபடைப்புக்களில் வெளிப்படுத்தியுள்ளேன். அந்தவகையில் எனது படைப்புக்களில் காணப்படும் ஓவியங்களின் வெளிப்பாடுகள், செஞ்சோலைபடுகொலை, பதவி, நேரலைரத்து, இழப்பு, கீறல்கள், புதைக்குழி, வடுக்கள், போர்ச்சூழலும், வடுக்கள் போன்றபலஓவியங்கள் வரைந்துள்ளேன். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான பலசந்தர்ப்பங்களை வெளிப்படுத்துகின்றன.
இவை ஒவ்வொன்றும் சோகம் நிறைந்தகாலங்களையும், நிலையினையும் வெளிப்படுத்துகின்றன. இன்றைய இளைஞர்கள் நாளையதலைவர்கள். இன்றைய இளைஞர்களைப் பாதுகாக்கவேண்டியது நமதுபொறுப்பு. அப் பொறுப்பினைநாம் எல்லோருக்கும் முன்னெடுக்கவேண்டும். ஆதனை பார்வையாளர்களுக்கும்,உரியவர்களுக்கும் எனதுகலைவெளிப்பாட்டின் ஊடாகவெளிப்படுத்தவிரும்புகின்றேன். அந்தவகையில் நானும் ஒருமாணவிஎன்றவிதத்தில் எனது மனஉணர்வினை சிலஓவியங்களில் வெளிப்படுத்தியுள்ளேன்.
அத்துடன் யுத்தத்தின் பின்னர் சமுதாயநிலை எவ்வாறு உள்ளது என்பதனை எல்லோராலும் அறியக் கூடியதாக உள்ளது. சமூகசீர்கேடுகளின் காரணமாக இன்றுசமூகத்தில் பாதிக்கப்படுவது சிறுவர்கள், தேவையானதொழில்நுட்பவசதி,அரவணைப்பு இன்மை, தனிமை போன்ற பலகாரணங்களை மையமாகவைத்து சிறுவர்கள் பலபிரச்சனைகளை முகம்கொடுக்கின்றனர். இவைபோரின் பின்னர் காணப்படும் பிரச்சனைகளாகஉள்ளது.
சிறுவயதுதாய்மார்கள் தோற்றல் பெறல், குழந்தைகளை பராமரிக்க முடியாதநிலையில் தேவையற்ற இடங்களில் தூக்கிப் போடுதல் போன்றபிரச்சனைகளுக்கு அடிப்படையானகாரணம் போர். அன்றுபாடசாலைமட்டங்களில் சிறந்தபுள்ளிகளைப் பெற்றுமுன்நிற்பவர்கள் வடக்கு, கிழக்குமாணவர்கள். இன்றுஅவை கூறமுடியாதநிலையில் மோசமாகஉள்ளனர். இவற்றுக்குகாரணம் அவர்களின் மனநிலைகள்,குடும்பச்சூழல் என்பன இவ்வாறான சூழ்நிலையில் ஒருமாணவன் கல்வியை சுத்தமாக நிம்மதியாக தொடரமுடியாத நிலைகாணப்படும். இ;வ்வாறான சூழ்நிலைக்குகாரணம் முள்ளிவாய்க்கால் போர்.
இவ்வாறான சூழ்நிலையைமாற்ற வேண்டும். எல்லாபிள்ளைகளுக்கும் கிடைக்கும் அதேதேவைகள் வடக்குகிழக்கில் உள்ளபிள்ளைகளுக்கம் தேவை. அவர்களையும் சமூகத்தில் நிம்மியாகவாழவைக்க வேண்டும் என்றமனநிலையில் எனது ஓவியங்களை வரைந்துள்ளேன்.