பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது இன்றையதினம் கொழும்பு ஆயர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நாட்டில் இடமடபெறும் கருத்தடைகள் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பகுதி நேர வகுப்புகளை நடத்துவது குறித்து பேராயர் எதிர்த்து வெளியிட்ட கருத்துக்கு ஞானசார தேரர் நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த 2012ம் ஆண்டு இது குறித்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்து மூல யோசனை, அரச சார்பற்ற நிறுவனங்கள் பணத்தை செலவிட்டு மேற்கொண்டு வரும் கருத்தடை வேலைத்திட்டங்கள் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் விபரங்களையும் ஞானசார, பேராயரிடம் இந்தநேரத்தில் வழங்கியுள்ளார்.
இதேவேளை பேராயர் சிங்கள பௌத்த அடையாளத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.