டாக்கா ஆடுகளம் குறித்து விமர்சனம் தெரிவித்த தமீம் இக்பால், பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையிடம் மன்னிப்பு கோரியுள்ளார். பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையினால் கடந்த நவம்பர் மாதம் 4ம் திகதி முதல் டிசம்பர் 12ம் திகதி வரை இடம்பெற்ற பங்களாதேஸ் பிரிமீயர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
இதில் டிசம்பர் 2ம் திகதி டாக்கா மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் தமீம் இக்பால் தலைமையிலான கொமிலா விக்டோரியன்ஸ் அணியும், மோர்தசா தலைமையிலான ரங்பூர் ரைடேர்ஸ் அணியும் போட்டியிட்டிருந்தன. முதலில் களம் இறங்கிய ரங்பூர் ரைடேர்ஸ் 97 ஓட்டஙகள் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்திருந்தனர்.
அதன் பின்னர் துடுப்பெடுத்தாடிய கொமிலா விக்டோரியர்ன்ஸ் அணி 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 100 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியிருந்தது. இந்தநிலையில் போட்டிக்கான ஆடுகளம் மிகவும் பயங்கரமானது என தமீம் இக்பால் விமர்சனம் செய்திருந்தார். பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையினால் பராமரிக்கப்படும் ஆடுகளத்தை தேசிய வீரர் ஒருவர் மோசமான அளவில் விமர்சனம் செய்ததால், தமீம் இக்பாலிடம் பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை விளக்கம் கோரியிருந்தது.
இந்நிலையிலேயே ஆடுகளம் குறித்து தான் கூறிய கருத்துக்கு தமீம் இக்பால் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து தமீம் இக்பால் தான் இதைவிட சிறந்த வார்த்தையை பயன்படுத்திருக்க வேண்டும் எனவும் தன்னுடைய தவறை ஏற்றுக்கொளவதாகவும் அதற்கேற்ற வகையில் மாற்று வார்த்தையை பயன்படுத்தி தான கருத்து கூறியிருக்க வேண்டும் எனவும் தமீம் இக்பால் தெரிவித்துள்ளார். மேலும் இனிவரும் காலங்களில் தன்னுடைய நடவடிக்கை சிறந்ததாக இருக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.