மகாநதி படத்துக்காக உடல் எடையை அதிகரிக்க இயக்குனரிடம் நடிகை மறுப்பு தெரிவித்துள்ளார். 1960 – 1970 காலப்பகுதியில் தமிழ் திரையுலகில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு மகாநதி என்ற பெயரில், தமிழ்-தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.
இந்தப்படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகின்ற நிலையில் சாவித்ரி சற்று குண்டான தோற்றம் கொண்டதனால் கீர்த்தி சுரேசை உடல் எடையை அதிகரித்து குண்டாகுமாறு இயக்குனர் நாக்.அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார். எனினும் கீர்த்தி சுரேஷ் அதற்கு மறுத்து விட்ட நிலையில் கிராபிக்ஸ் மூலம் கீர்த்தி சுரேசை பருமனாக காட்ட இயக்குனர் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக உடல் எடையை அதிகரித்து விட்டு படப்பிடிப்பு முடிந்ததும், பழைய தோற்றத்துக்கு மாற முயன்றும் முடியவில்லை.
இதை மனதில் வைத்தே கீர்த்தி சுரேஷ், உடல் எடையை கூட்ட மறுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மகாநதி படத்தில், கீர்த்தி சுரேசுடன் துல்கர் சல்மான், சமந்தா அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடத்து வருகின்ற நிலையில் குறித்த படம் வருகிற மார்ச் மாதம் இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.