ஆர். பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள பொலிவுட் படம் பாட்மேன். (PAD MAN) படம் குடியரசு தினத்தன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று ட்ரெய்லர் (Trailer) வெளியிடப்பட்டுள்ளது. பேட்மேன் (PAD MAN) பட ட்ரெய்லர் (Trailer) வெளியாகி அனைவரையும் ஈர்த்துள்ளது. இந்த PAD MAN தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த விலை குறைந்த நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். நாப்கின்கள் வாங்க முடியாமல் பழைய முறைப்படி சுகாதாரம் இல்லாதவற்றை பயன்படுத்திய பெண்களுக்கு அருணாச்சலத்தின் கண்டுபிடிப்பு ஒரு வரப் பிரசாதம். அவரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படமே பாட்மான். ( PAD MAN)
பாட்மான் ட்ரெய்லரில் ((PAD MAN TRAILER) அமிதாப் பச்சன் Voice over கொடுத்துள்ளார். அமெரிக்காவில் சூப்பர் மான், பாட்மான், ஸ்பைடர் மான் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பாட்மான் உள்ளார் என்று அமிதாப் குரல் கொடுத்துள்ளார்.
பாட்மான் ட்ரெய்லர் ((PAD MAN TRAILER) அனைவருக்கும் பிடித்துள்ளது. படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என திரை விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக TRAILER பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர்கள் எதையும் வியாபார நோக்குடன் பார்க்கும் காலத்தில் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் நல்லெண்ணத்தை பொலிவுட் இனம் கண்டு படமாக்கியுள்ளது. ஆனால் இதனை தமிழ் திரையுலகம் கோலிவுட் அல்லவா இதனை முதலில் படமாக்கி இருக்க வேண்டும் என்ற ஏக்கங்கள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமைத் தேடித் தந்த தமிழர் மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கையை படமாக்கப் போவதாக ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்ததாகவும், ஆனால் அதன் பிறகு எந்த அறிவிப்பும் வரவில்லை எனவும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். கொலிவுட் கண்டுகொள்ளாவிடின் மாரியப்பனையும் பொலிவுட்டே கண்டுகொண்டு படம் எடுத்து கவுரவித்து விடும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.