Home இந்தியாதமிழக ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதி மூவர் பலி…

தமிழக ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதி மூவர் பலி…

by admin

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்துவதற்காக கடலூர் சென்றுவிட்டு திரும்பும் போது புதிய கல்பாக்கம் அருகே அவருக்கு பாதுகாப்புக்கு வந்த பொலிரோ ஜீப் மோதியதில் தந்தை, மகன் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகம் முழுதும் ஆய்வு நடத்தி வருகின்ற நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். இந்தநிலையில் ஆளுநர் சென்னைக்கு கிழக்குக்கடற்கரை சாலை வழியாக திரும்பிய வேளை அவருக்கு பாதுகாப்பு அளிக்க காஞ்சிபுரத்திலிருந்து சென்ற பொலிரோ ஜீப் வாகனம் புதிய கல்பாக்கம் பேருந்து நிலையம் அருகே டிவிஎஸ் எக்செல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியுள்ளது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்போரூர், திருவஞ்சாவடியைச்சேர்ந்த சேர்ந்த சுரேஷ்(30) என்பவரும் அவருடன் பயணித்த நரேஷ்குமார் என்பவரின் மகன் கார்திக்(11) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்கள் மீது மோதிய பொலீரோ காவல் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்ற கௌசல்யா(70) என்ற மூதாட்டி மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு ; அனுப்பி வைக்கப்பட்ட போதும் ; சிகிச்சை பலனளிக்காமல் அவரும் உயிரிழந்துள்ளார். குhவல்துறை வாகனம் கட்டுப்பாடில்லாமல் அதிக வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More