தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு உருவாகி இருக்கும் காங் படத்தில் நடிகர் சூர்யா சொந்த குரலில் பேசியிருக்கிறார்.
சூர்யா தற்போது நடித்துவரும் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படம்தான் தெலுங்கில் காங் என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. இதுவரை சூர்யா நடித்து தெலுங்கில் டப்பிங் செய்யப்படும் படங்களுக்கு அவரே தெலுங்கில் டப்பிங் பேசியதில்லை என்ற நிழலைவயில் முதல் முறையாக காங் படத்திற்காக சூர்யாவே டப்பிங் பேசியுள்ளராம்.
தெலுங்கில் உருவாகியுள்ள காங் படத்தின் டீசரில் சூர்யா சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளதாகவும் டீசரில் சூர்யாவின் தெலுங்கு உச்சரிப்பு நன்றாக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது