தொடர்ச்சியான ஏமாற்றங்களினால் என்னுடைய அரசியல் பயணத்தை மாற்றவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் தென்மராட்சித் தொகுதி அமைப்பாளருமான க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரியவருவதாது
எனது பிரதேச மற்றும் ஆதரவாளர்களின் கருத்துக்களை அறிந்த பின்னரே இதுகுறித்த முடிவு எடுப்பேன். தமிழரசுக் கட்சிக்குள் உள்ளோர் சிலர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஒன்றுக்கு பலதடவைகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றேன்.
சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியல் முன்னதாகவே இறுதி செய்யப்பட்டிருந்தது. எனினும் இறுதி நேரத்தில் எனக்கு தெரியாமல் மிக இரகசியமாக புதிய பட்டியலை தயாரித்து தமிழரசுக் கட்சி தலைமை வேட்டுமனுவை தாக்கல் செய்தது இதனால் தமிழரசுக் கட்சிக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.
மாகாண சபை உறுப்பினர் சயந்தன் மற்றும் சிலரால் அந்த பெயர்பட்டியல் இறுதி நேரத்தில் கீழ்த்தரமான முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் கட்சிக்குள் உள்ளோர் சிலரின் ஏமாற்றத்தினால் எனது அரசியல் பாதையை மாற்ற வேண்டிய நிர்பந்தம் எழுந்துள்ளது.
இதேவேளை வேட்பாளர் பட்டியல் மாற்றத்தால் எழுந்த முரண்பாடுகளின் போது நான் சயந்தனை தலைக்கவசத்தால் தாக்கவில்லை. கையில் தலைக்கவசத்தை தூக்கும் போது அது அடிப்பது போன்று தெரின்றது எனவும் அவர் தெரிவித்தார்.