இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பின்னிரவு 11.47க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதுடன் சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தின் போது 62 மற்றும் 80 வயதான இருவரே இடிபாடுகளுக்கு சிக்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜாவா சுமத்ரா தீவுக்கு மேற்கே கடலுக்கடியில் சுமார் 91 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு 2 மணித்தியாலங்களின் பின்னர் மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.