176
புனேவில் நடைபெற்ற ஐ.ரி.எப். (ITF)மகளிர் டென்னிஸ் சம்பியன் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் ஜோர்ஜினா கார்சியா பெர்ஸ் (Georgina Garca Perez ) வெற்றியீட்டி சம்பியன் பட்டம் வென்றுள்ளார். பிரித்தானியாவின் கற்றி டியூன் (Katy Dunne ) உடன் இன்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் ஜோர்ஜினா கார்சியா பெர்ஸ் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றியீட்டியீட்டியுள்ளார்.
ஐ.ரி.எப் மகளிர் டென்னிஸ் சம்பியன் போட்டிகள் 2001-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் புனே நகரில் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது ஆசியாவில் ஜோர்ஜினா பெற்ற முதலாவது சம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love