சினிமா

மீண்டும் பிரபு & பிரபுதேவா

சார்லி சாப்ளின்-2 படத்தின் மூலம் பிரபு தேவா – பிரபு இருவரும் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் படம்தான் சார்லி சாப்ளின்-2. கடந்த 2002-ஆம் வெளியாகிய சார்லி சாப்ளின் படத்தில் பிரபு, பிரபு தேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

நகைச்சுவைப்படமாக அமைந்த இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகின்ற நிலையில் இதில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அடா சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  இந்தப் படமும் முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாக உள்ள நிலையில் இந்த படத்திலும் இளைய திலகம் பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டப் படப்பிடிப்பு கோவாவில் முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. அதில் பிரவுதேவா – பிரபு 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார். முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த பாகத்தையும் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply