இலங்கையில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெ போட்டியில், என்ற வீரர் ஒரு ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து சாதனைப் புரிந்துள்ளார். இலங்கையின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் சார்பில், 15 வயதுக்குட்பட்டோருக்கான முரளி குட்னெஸ் கோப்பை ( Murali Goodness Cup) போட்டி நடத்தப்படுகிறது.
இதில் தர்மபாலா கொட்டவா (Dharmapala Kottawa) அணிக்கு எதிரான ஆட்டத்தில் பொக் கிரிக்கெட் அக்கடமி ( FOG Cricket Academy ) அணிக்காக விளையாடிய நவிந்து 89 பந்துகளில் 109 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அவர் ஒரு ஓவரில் 7 சிக்சர்கள் அடித்துள்ளார். நோ போலிலும் அவர் சிக்சர் அடித்துள்ளார். ஒரு ஓவரில் 7 சிக்சர் அடிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்தப் போட்டியை நேரில் பார்த்த முரளிதரன் அசந்து போய் நவிந்துவைப் பாராட்டியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில், ஒரு நாள்ப் போட்டியில், 2007 ஆண்டு உலகக் கோப்பையின் போது நெதர்லாந்து அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் ஹர்ஷலே கிப்ஸ் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்திருந்தார். இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டியில் இந்தியாவின் யுவராஜ் சிங், இங்கிலாந்துக்கு எதிராக, ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்திருந்தார். முதல்தர கிரிக்கெட்டில், தற்போதைய இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரி, ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.