உலகம் புலம்பெயர்ந்தோர்

கலிபோர்னிய பாரிய காட்டுத்தீயினால் பெரும் அழிவு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கலிபோர்னியாவில் பாரியளவிலான காட்டுத் தீ பரவியதனால் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் இடம்பெற்ற மூன்றாவது மிகப் பெரிய காட்டுத்தீ விபத்து இதுவென தெரிவிக்கப்படுகிறது. காட்டுத்தீ பரவி வருவதனால் தொடர்ந்தும் அழிவுகள் ஏற்படக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்டுத் தீக்கு தோமஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

விபத்து காரணமாக 750 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கு 97 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானங்களையும் ஹெலிகொப்டர்களையும் பயன்படுத்தி காட்டுத் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply