180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மலேசிய பிரதமர் நஜீப் பின் ரன் அப்துல் ரசாக் (Najib bin Tun Abdul Razak)இலங்கைக்கு பயணம் செய்துள்ளார். இன்று முதல் எதிர்வரும் 19ம் திகதி வரையில் மலேசிய பிரதமர் இலங்கையில் தங்கியிருப்பார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த பயணம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு அவர் இவ்வாறு இலங்கைக்கு பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love