193
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வடமராட்சி புலோலி மந்திகையில் இன்று அதிகாலை முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள் வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டி 31 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். முகத்தை மூடி மறைத்தவர்கள்,வீட்டின் சமையல் அறை புகைக்கூட்டின் வழியாக உள்நுழைந்தே இந்தக் கொள்ளைச் சசம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. வயோதிபத் தம்பதிகளுக்கு கத்தியைக்காட்டி மிரட்டி நகையைக் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Spread the love