நடிகர் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் வேலைகள் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வடசென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்ற தனுஷ் இப்படங்களினை முடித்துவிட்டு, அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் புதிய படத்தினை இயக்க முடிவு செய்துள்ளார். பவர்பாண்டி படத்தினைத் தொடர்ந்து தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது படமாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப்படமானது தமிழ் – தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்தப்படத்தில் தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்கலாமா என் ஆலோசனை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது