குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தலின் போது 51 வீதமான வாக்குகள் எவருக்கும் கிடைக்காது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது எந்தவொரு அரசியல் கட்சியும் 51 வீத பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவை ஏற்பட்டால் மலர்மொட்டு அல்லது யானையுடன் இணைந்து உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அரசாங்கம் மூன்றாண்டுகளுக்கு ஆட்சி நடத்தும், அதேபோன்று ஜனாதிபதியும் மூன்றாண்டுகள் வரையில் ஆட்சியில் இருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியையும் தீர்மானிக்கும் சக்தியாக சுதந்திரக் கட்சி திகழும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.