194
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வழக்கை விசாரணை செயவதற்கு மியன்மார் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. மியன்மாரின் சிவிலியன் ஜனாதிபதி ஹிட்டி க்யூ ( Htin Kyaw ) இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். நாட்டின் அரச இரகசிய சட்டத்தின் கீழ் அண்மையில் இரண்டு ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த இரண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிரான வழக்குகளையும் விசாரணை செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ரொய்டர்ஸ் ஊடகத்தின் ஊடகவியலாளர்களான 31 வயதான வா லோன் மற்றும் 27 வயதான கியாவ் சோ யோவ் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love