192
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறு கோரினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான பேச்சுவார்த்தைகளோ அழைப்போ இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love