ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட ஐநூறு மீனவர்கள் மற்றும் விவசாய மக்களுக்கு உதவுவதற்காக முதன் முதலில் கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டப்படுவதாக தெரிவிக்கப்படுவதற்கான முயற்சியை ஜி.வி.பிரகாஷ்குமார் ஆரம்பித்து வைத்துள்ளார்.
எதுதர்மா என்ற பெயரில் இயங்கும் வலைதள முகவரி மூலமாக இந்த நிதி திரட்டுப்பட்டு வருகிறது.; பேசும் போது, தமிழகத்தின் தென் பகுதியை தாக்கிய ஒக்கி புயலால் முக்கியமாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களும், விவசாய மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு உதவுவதற்காக ஜி.வி.பிரகாஷ்குமார் களத்தில் இறங்கினார். அப்போது குடும்ப உறுப்பினர்களை முழுவதுமாக இழந்து தனியாளாக ஆதரவற்று நின்ற சின்னத்துறையைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண்மணிக்கு உதவிகளை செய்தார்.
அப்போது அங்குள்ளவர்கள் தங்களுக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் ஏதேனும் உதவி செய்யமாட்டாரா எனக் கேட்டதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த தகவலை சேகரித்து, அதில் முதலில் ஐநூறு பேருக்கு கிரௌட் பண்ட் என்ற உத்தி மூலம் நிதி திரட்டி ஆதரிக்க எண்ணியதாகவும் இந்த திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய பங்களிப்பாக ஒரு தொகையைக் கொடுத்து இந்த கிரௌட் பண்ட் நிதி திரட்டும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் என ஜி.வி.பிரகாஷ் குமாரின் நண்பரும் சமூக சேவகருமான குணசேகரன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகை சாமான்கள் வாங்குவதற்காக மாதத்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்குவது என்று தொகை நிர்ணயித்து பதினைந்து லட்ச ரூபாயை இந்த கிரௌட் பண்ட் மூலம் திரட்ட திட்டமிட்டு தொடங்கியிருப்பதாகவும் நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள் தம்முடன் தொடர்பு கொண்டு வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.