குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
98 வீதமான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பங்காளி நாடுகள், ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் ஆகிய தரப்புக்களின் ஒத்துழைப்புடன் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒஸ்ட்ரியாவில் நடைபெற்ற நிலக்கண்ணி வெடி அகற்றுதல் குறித்த மாநாட்டில் பங்கேற்ற இலங்கைப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
ஒஸ்ட்ரியாவிற்கான இலங்கைத் தூதுவர் பிரியானி விஜேசேகர இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். நிலக்கண்ணி வெடிகளற்ற ஓர் சூழலை உருவாக்கும் முனைப்புக்களில் இலங்கை ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதில் தற்போதைய அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.