சிறுமிகளை வகை செய்யும் மசோதாவை இந்திய மத்தியப்பிரதேசம் மாநில அரசு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது. மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு தாயான நிலையில் 21 வயதான வாலிபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இதுபோன்ற கொடூரங்கள் தொடராமல் இருக்கவும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களை முடிவுக்கு கொண்டு வரவும் மத்தியப் பிரதேசம் மாநில அரசின் சார்பில் சட்டசபையில் அணிமையில் ; ஒரு புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
சிறுமிகளை வன்புணர்வுக்குட்படுத்துவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த சட்ட மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த மசோதா ஜனாதிபதியின் கையொப்பத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்தியப்பிரதேசம் மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இன்று தெரிவித்துள்ளார்.