Home உலகம்முதன் முறையாக லண்டன் பிஷப் பொறுப்புக்கு பெண்

முதன் முறையாக லண்டன் பிஷப் பொறுப்புக்கு பெண்

by admin


மிகப் பழமையான கிறிஸ்தவ பிரிவான சேர்ச் ஒப் இங்கிலாந்து ( church of england ) முதன் முறையாக பெண் ஒருவரை லண்டன் பிஷப் பொறுப்புக்கு நியமித்துள்ளது. சாரா  எலிசபேத்முல்லாலி  ( Sarah Elisabeth Mullally   ) என்ற பெண்யே இவ்வாறு பிஷப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் இருந்து பிரிந்து 1534-ம் ஆண்டு தனியாக சேர்ச் ஒப் இங்கிலாந்து என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. மிக பழமையான இந்த அமைப்பின் கீழ் இருக்கும் அனைத்து பிஷப்களும் இதுவரை ஆண்களாகவே இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், 133-வது பிஷப்பாக சாரா முல்லாலி நியமிக்கப்பட்டுள்ளார். சாரா இதற்கு முன்னதாக தலைமை  தாதியாக பணியாற்றியுள்ளார். 2001-ம் ஆண்டு தலைமை தாதியாக  சாரா நியமிக்கப்பட்ட போது, மிக குறைந்த வயதில் அப்பொறுப்புக்கு வந்தவர் என்ற பெயரை பெற்றிருந்தார்.

1994-ம் ஆண்டு முதல் சேர்ச் ஒப் இங்கிலாந்து பெண் மத போதகர்களை நியமித்து வருகின்ற போதும் பழமைவாதிகளின் எதிர்ப்பு காரணமாக பிஷப் பொறுப்புக்கு பெண்களை நியமிக்க முடியாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More