178
மட்டக்களப்பில் கடந்த மாதம் 15ஆம் திகதி அமரத்துவமடைந்த ஊடகவியலாளர் அமரர் எஸ்.எம்.கோபாலரட்ணம் (கோபு ஐயா, எஸ்.எம்.ஜி. ) அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறவுள்ளது. யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்.நாச்சிமார் கோவிலுக்கு அருகில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் (ராஜா கிறீம் ஹவுஸ்) அந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர்களான க. கானமயில்நாதன், அ.பெருமாள் , எஸ்.யோகரட்ணம் (இராதேயன்) , வீ . தேவராஜ் , பசீர் காக்கா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
SMG ன் நினைவழியா நாட்கள் – நினைவஞ்சலிக் கூட்டம்…
19:12;17 – 18:23pm
Spread the love