குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜே.வி.பியினால் பணி நீக்கப்பட்ட உறுப்பினர்களையே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகளை இணைத்துக் கொண்டு ஊடக சந்திப்புக்களை நடத்தி பிரச்சாரம் செய்வதனையிட்டு பொதுஜன முன்னணி கவலையடைய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment