162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சியின் பணியை செய்கின்றாh என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பகிரங்கமாக விமர்சனம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஏனைய எந்தவொரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியும் இவ்வாறு விமர்சனம் செய்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதி பகிரங்கமாக விமர்சனங்களை வெளியிட்டு வருவதாகவும் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love