Home இலங்கைதேயிலை பிரச்சினை குறித்து இலங்கையுடன் ரஸ்யா பேச்சுவார்த்தை

தேயிலை பிரச்சினை குறித்து இலங்கையுடன் ரஸ்யா பேச்சுவார்த்தை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தேயிலை பிரச்சினை குறித்து இலங்கையுடன் ரஸ்யா பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அண்மையில் ரஸ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி இலங்கைத் தேயிலையில் வண்டு காணப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இலங்கையிடமிருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஸ்யா கட்டுப்பாட்டை விதித்திருந்தது.

இந்த கட்டுப்பாட்டை நீக்கும் முயற்சிகளில் இலங்கை கடுமையாக ஈடுபட்டுள்ளது. இதன் ஓர் கட்டமாக இந்த மாத இறுதியில் இலங்கை அரசாங்கம் ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ரஸ்ய தேயிலை இறக்குமதியில் இலங்கை 23 வீதமான பங்களிப்பினை செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More