மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமாரன் விமலராஜீக்கு கடந்த டிசம்பர் 1ம் தகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிராக மேல் முறையீட்டு நீதி மன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிராக நேசகுமாரன் விமலராஜினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாரளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், பணிப்பாளர் விசாரணை அதிகாரி, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் காணி சீர்திருத்த ஆணைக்குழு, செயலாளர் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் பணிப்பாளர் காணி சீர்திருத்த ஆணைக்குழு அம்பாறை மாவட்டம் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இடமாற்றமானது தன்னிச்சையாக எந்த விதமான காரணங்களும் சரியாக காட்டப்படாமல் பாரளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களின் அடிப்படையற்ற குற்றச்சாட்டின் பேரில் வழங்கப்பட்டதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேசகுமாரன் விமலராஜ் பணிப்பாளராக கடமையாற்றிய போது கடந்த பெப்ரவரி 22ம் திகதி புன்னக்குடா நில அபகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது துப்பாக்கி தாக்குதலுக்கு இலக்காகி தற்போது காவல்துறை பாதுகாப்பபுடன் கடமையில் ஈடுபட்டு வருகின்றார். மேலும் தனக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் சம்மந்தமாகவும் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்சீனித்தம்பி யோகேஸ்வரன் உட்பட அவரின் ஆதரவளர்களினாலும் தொடச்சியாக சமூக வலைத்தளங்களில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கருத்துக்களை பரப்புவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான எல்.ரி.டெகிதெனிய மற்றும் சிறின் குணரத்ன அவர்களால் மேற்படி இடமாற்றத்திற்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.