குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் இரு பெண் வேட்பாளர்களின் ஆள் அடையாள அட்டையை , தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட்டவரும் , சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவருமான த. தம்பிராசா பறித்து சென்றுள்ளதாக குற்றம் சாட்டபட்டு உள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை தம்பிராசா மறுத்துள்ளார்.
காரைநகர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடவிருந்த முருகவேல் மஞ்சுளாதேவி, கோடிஸ்வரன் நிதுஷா ஆகிய இரு வேட்பாளர்களின் அடையாள அட்டைகளை த.தம்பிராசா பறித்துக்கொண்ட காரைநகர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான கணேசபிள்ளை பாலசந்திந்திரன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் தாம் பப்ரல் அமைப்பிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அடையாள அட்டையை பறிக்கவே இல்லை.
அது தொடர்பில் தம்பிராசாவிடம் கேட்ட போது , தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட்டேன். இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் காரைநகர் பிரதேச சபையில் போட்டியிட ஆசனம் கேட்டு இருந்தேன்.
அதற்கு தமிழரசு கட்சியும் , ரெலோ அமைப்பினரும் கூட்டு சதி செய்து எனக்கு ஆசனம் தர மறுத்து இருந்தார்கள். அந்நிலையில் நான் ஏற்கனவே எனது உறவினர்கள் முறையான இரண்டு பெண்களையும் இன்னும் சில ஆண்களையும் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவதற்காக அவர்களிடம் சம்மதம் வாங்கி வைத்திருந்தேன்.
அந்நிலையில் எனக்கு ஆசனம் தர மறுத்தமையால், அவர்களும் தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்து இருந்தனர். அந்நேரம் தமிழரசு கட்சி சார்பில் காரைநகரில் போட்டியிடும் கணேசபிள்ளை பாலசந்திரன் குறித்த இரு பெண்களையும் அவர்கள் வீட்டிற்கு சென்று மிரட்டி பின்னர் அவர்களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் போட்டியிட சம்மதம் வாங்கி உள்ளார்.
அந்நிலையில் என்னை பழி வாங்கும் முகமாக என் மீது பொய்யான குற்றசாட்டை தற்போது முன் வைத்துள்ளார். நான் யாரிடமும் அடையாள அட்டையை பறிக்கவில்லை. எனக்கு அவ்வாறு பறிக்க வேண்டியும் தேவையும் இல்லை என தெரிவித்தார்.