2022-ம் ஆண்டின் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை நடத்தும் வாய்ப்பு இங்கிலாந்தின் பேர்மிங்காம் நகருக்கு கிடைத்துள்ளது. டர்பன் நகர் போட்டியை நடத்த முடியாது எனக் தெரிவித்த மையினைத் தொடர்ந்து இந்த வாய்ப்பானது பேர்மிங்காம் நகருக்கு கிடைத்துள்ளது.
பிரித்தானிய காலணித்து ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளுக்கு இடையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி இடம்பெற்று வருகின்றது. இறுதியாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி ஸ்கொட்லாந்தின் கிளஸ்கோவில் நடைபெற்றிருந்தது. அதேவேளை 2018-ம் ஆண்டிற்கான போட்டி ஒஸ்ரியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2022-ம் ஆண்டிற்கான பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட போதும் நிதியின்மை காரணமாக தொடரை நடத்த அந்நாடு மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2022 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கு 750 மில்லியன் பவுண்ஸ்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது